அன்பு சகோதர, சகோதரிகளே , இன்றைய நாளில் ஆண்டவர் ஜெபத்தை பற்றி ஒரு பதிவு போட எனக்கு இன்று காலை வெளிப்படுத்தினார்.
முதலாவது “ஜெபம்” என்பது நாம் தேவனோடுகூட பேசுவது,எப்படி ஒரு குழந்தை தன் தகப்பனிடம் பேசுகிறதோ அப்படியே நாமும் தேவனிடம் பேசவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
“அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி, என் இருதயம் கர்த்தருக்குள் களிகூறுகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின் மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிபிலே சந்தோஷப்படுகிறேன்” (1சாமு 2:1)
என்று அன்னாள் சொல்கிறார். வேதத்தில் நாம் சாமுவேலின் புத்தகத்தை வாசித்தால் இந்த தாய் அன்னாளை பற்றி கூறப்படுகிறது. அவர் குழைந்தை இல்லாத பெண்மனியாக காணப்பட்டார்.அவருக்குள் எத்தனை வேதனை இருந்திருக்கும் அன்னாள் தேவனிடத்தில் போய் தன் வேதனை எல்லாம் கொட்டி தீர்த்தார். அவர் ஆண்டவரிடத்தில் ஜெபம் பண்ணினார். அன்னாள் ஜெபம்பண்ணி தன் தேவையை தேவனிடம் தெரியப்படுத்தினார், தேவன் அன்னாளில் ஜெபத்தை கேட்டு அவருக்கு சந்தோஷத்தை தந்ததினால் மேற்கூறிய வார்த்தையை அன்னாளால் சொல்லமுடிந்தது.
“சாலமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று” (2நாளா 7:1)
சாலமோன் ராஜா தேவனை நோக்கி ஜெபம் பன்னினவுடனேயே தேவன் ஜெபத்தைக் கேட்டு அக்கினியை இறக்கினார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
அடுத்ததாக “ என் நாமம் தரிக்கப் பட்ட ஜனங்கள் தங்களை தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தை தேடி, தங்கள் பொல்லாத வழியை விட்டு திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன்” (2நாளா 32:24)
எனது அருமை சகோதரனே, சகோதரியே இதை வாசித்து கொண்டிருக்கிற நீங்கள் எப்படி பட்ட தவறை செய்திருந்தாலும், இப்பொழுது அதை நினைத்து மனம் வருந்தி உங்களை தாழ்த்தி தேவனிடம் ஜெபம் பண்ணுங்கள் தேவன் உங்களுடைய ஜெபத்தை கேட்ப்பார் . தேவனுடைய பாதத்தில் அமருங்கள் , அழுது புழம்பி கண்ணீரோடு மன்றாடுங்கல் ஆண்டவர் உங்களுக்கு சமாதான்ம கொடுக்கும் வரை அவர் பதத்தை யாகோபுவைப் போல் பற்றிக்கொள்ளுங்கள் “ அப்பொழுது யாக்கோபு : உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தை கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்” (ஆதி 32:39). நிச்சயம் உன்னை அந்த பாவத்திலிருந்து ஒரு விடுதலையைத் தருவார். மகனே , மகளே உன்னால் விடமுடியாத பாவம் உன்னை பற்றிக்கொண்டிருக்கிறதா, அதற்க்காகவும் ஆண்டவரிடம் மன்றாடு , ஆண்டவரே இப்படி பட்ட பாவம் என்வாழ்வில் இருக்கிறது அதை நான் விடவேண்டும் என்று ஆசைபடுகிறேன் ஆனால் அது என்னை விடுவதில்லை அதை நீர் விடுவியும் என்று ஆண்டவரிடம் மன்றாடு நிச்சயமாக ஆண்டவர் உன் ஜெபத்தை கேட்பார்.
“அந்நாட்களில் எசேக்கியா வியாதிபட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கத்தரை நோக்கி ஜெபம் பண்ணும் போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தை கட்டளையிட்டார். (2நாளா 32:24) – ல் இப்படியாக வாசிக்கிறோம். தேவனுடைய பிள்ளைகளே நிங்கள் எப்படி பட்ட வேதனையிலோ அல்லது வியாதியிலோ அல்லது உன் உறவினர்கள் மரண படுக்கையிலோ இருந்தாலும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுங்கள் அப்பொழுது அவர்களுக்கு தேவன் இறங்குவார்.
எசேக்கியா – வை பற்றி நாம் படிப்போமானால் தேவன் அவர் மரணப்படுக்கையில் இருந்தபொழுது அவருடைய ஜெபத்தை கேட்டு அவர் ஆயுசு நாட்களுடன் 15 வருடங்களை கூட கொடுத்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம்,"உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களை கூட்டுவேன்; உன்னையும் உன் நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்து, என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த நகரத்திற்கு ஆதரவாயிருப்பேன் என்று சொல் என்றார்" (2இரா 20:6) தேவனிடம் அழுது மன்றடுங்கள் கர்த்தர் விடுதலையை கொடுப்பார்.
சில நேரங்களில் நாம் எப்படி ஜெபம் பண்ண வேண்டுமென்று நமக்கு தெரிவதில்லை, சிலர் நினைக்கலாம் இயேசுவுக்குதான் எல்லாம் தெரியுமே நாம் ஏன் ஜெபம் பண்ண வேண்டும் அவரே செய்வார் என்று, அப்படி அல்ல தேவ பிள்ளைகளே உங்கள் தகப்பன் உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார் ஒரு பொருள் தன் பிள்ளைக்கு மிகவும் பிடிக்கும் என்று அவருக்கு தெரியும் ஆனாலும் அவன் (அவள்) கேட்கும் போது வாங்கி கொடுக்கலாம் என்று நினைப்பார் நீங்கள் அந்த பொருளை உங்கள் தந்தையிடம் கேட்டால் உடனே கிடைத்துவிடும். அப்படித்தான் தேவனும் நீங்கள் அவரிடம் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்; ( மத் 7:7)
ஆண்டவரே சொல்லியிருக்கிரார் கேளுங்கள் தரப்படும் என்று பிறகு ஏன் ஆண்டவரிடம் கேட்க தயங்குகிறீகள் உரிமையோடு கேளுங்கள் தேவன் நிச்சயம் செய்வார்.
ஜெபம் பண்ணுவது எப்படி?
தேவன் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கண்கிறார் ஆகவே தான் ஆகார் நீ என்னை காண்கிற தேவன் என்று சொன்னார்.
“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்; ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் தரித்திருங்கள்” ( கொலோ 4:2) , “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” ( 1தெச 5:17) இடைவிடாமல் தேவோடுகூட உறவாட வேண்டும் , “அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் “( தானி 6:10)
தானியல் மூன்று வேலையும் ஜெபம் பண்ணினார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் எப்படி பட்ட சூழ்நிலைகள் வந்தாலும் நாம் தேவனிடத்தில் பேசுவதை நிறுத்த கூடாது. “ உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் திக்கிறேன்” (சங் 119:164) – ல் தாவீது ராஜா இப்படியாக சொல்லுகிறார் , நம்மால் இந்த காலகட்டத்தில் வேலைக்கு போகவேன்டும், இன்னும் பல காரியங்கள் நம்மில் உள்ளது இப்படி பட்ட சூழ்நிலையில் நாம் தேவனோடு எவ்வளவு நேரம் ஜெபத்தில் செலவிடுகிறோம் என்று நிதானித்தறிய வேன்டும். ஒருமணி நேரமாவது நாம் அவருக்கு செலவிடவேண்டும்.
“அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன். (1தீமோ2:8) அப்போஸ்தலராகிய பவுல் கூறுகையில் எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணுங்கள் என்று கூறுகிறார். அதே நேரத்தில் பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ண கற்றுக்கொள்ளுங்கள் ஏனென்றால் நமக்கு என்ன தேவை என்று நமக்கு தெரியாது ஆனால் பரிசுத்த ஆவியுடன் நாம் ஜெபம் பண்ண தொடங்கினால் ஆவியானவர் நமக்காக விண்ணப்பம் பண்ணுவார் “அந்தபடியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால் , ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நம்க்காக வேண்டுதல்செய்கிறார். ( ரோம 8:26), ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மறித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. ( ரோம 8:34) ஆகவே தேவ ஜனமே பரிசுத்தாவிக்குள்ளாகி நாம் ஜெபிக்கும்போது அவரே நம்மக்காக , நம் தேவைகளுக்காக தேவனிடம் விண்ணப்பம் செய்கிறார்.
ஜெபம் செய்ய ஏற்ற நேரம் எது?
தேவ ஜனமே ஆண்டவரிடம் பேசுவதற்கு தனி நேரம் என்று எதுவுமே கிடையாது ,
உண்ணும்போதும் துதிப்பேன் , உறங்கும் போதும் துதிப்பேன் , எந்த நேரத்திலும் தேவனை துதிக்கலாம். ஆனால காலை நேரம் என்பது தேவனை துதிப்பதற்கு நமக்கு ஏற்ற நேரமாக உள்ளது ஏனென்றால் அதிகாலையில் அமைதலாக இருக்கும் நாம் தேவனுடன் பேசுவதற்க்கும் தேவன் நம்முடன் பேசுவதற்கும் இது மிகவும் உகந்தநேரமாக இருக்கும் “ அதிகாலையில் எழுந்து சத்தமிட்டேன் ; உம்முடைய வசனத்திற்கு காத்திருக்கிறேன் (சங் 119:147) என்று தாவீது சொல்கிறார். “ அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள்” ( நீதி 8:17)
“என் ஆத்துமா இரவில் உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மை தேடுகிறேன்; ( ஏசா 26:9)
“அவர் அதிகலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஓரிடத்திற்கு போய், அங்கே ஜெபம் பண்ணினார்”. (மார்1:35)
ஆகவே நாமும் அதிகாலையில் தேவனை தேடினால் கண்டடைவோம் , நம் ஆத்துமா தேவனோடு உறவாடும். ஆகவே தேவ ஜனமே தேவனை ஜெபத்தில் மகிமைபடுத்தி நாமும் தேவனிடமிருந்து மகிழ்ச்சி பெறுவோம். ஆமென்
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
JEBAM YEPPADI SEIYA VENDUM YANDRU SOLLI THANTHURUKIRINGAL ROMBA AZHAGA IRUKKU,,,,,
பதிலளிநீக்குTHANX GOD
Thanks to GOD
பதிலளிநீக்கு