திங்கள், 9 ஆகஸ்ட், 2010
நிலை தவறாதே பெண்ணே உனக்கு கேடுண்டாக்காதே
1. ஆதி மனுஷி ஏவாளும் - ஆதாமை விட்டுப் பிரிந்தாளாம் தனி வழியே
சென்றாளாம் - தந்திர வலையில் விழுந்தாளாம் ( ஆதி 3: 1 - 7)
2. செல்லப்பிள்ளை தீனாளாம் - தெருத்தெருவாய்ப் போனாளாம்
சீகேமுக்குச் சென்றாளாம்- சீரழிந்து வந்தாளாம் ( ஆதி 34: 1 - 31)
3. பூவையரில் மீகாளாம் - புருஷனைக் கேலி செய்தாளாம். தீரா சாபத்தைப்
பெற்றாளாம் - சந்ததி அற்றுப் போனாளாம் (2சாமு 6: 1 - 23 )
4. பெத்தலேகம் ஊராளாம் தாறுமாறாய் நடந்தாளம் - தகப்பன் வீட்டுக்குப்
போனாளம் பன்னிரண்டு துண்டாய் வெட்டப்பட்டு - பார்சல்
பண்ணப்பட்டாளாம். ( நியா 19: 1 - 30)
5. யேசபேலின் வேசித்தனம் - எருசலேமை நாசமாக்கிட நாணங்கெட்ட
வேசி உடலை - நாய்கள் கூடி தின்றனவாம் , (2 ராஜா 9 : 22 - 37)
6 .பூரண ரூபி ஆதி சபை - புவி இராஜாக்களில் காதல் கொண்டு
ரோமாபுரிக்குப் போனதினால் - வேசிகள் தாயென விளங்கிவிட்டாள்
( வெளி 18: 1 - 5 )
அன்பானவர்களே நாம் எவ்வளவு அந்தஸ்து உடையவர்களாயிருந்தாலும் தேவனுக்கு விரோதமான பாவம் செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு. எனவே எச்சரிக்கையாயிருங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.