விசுவாச வார்த்தைகள்
நீ பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன்
எனக்கு அன்பான தேவ ஜனமே வேதத்தில்
"பயப்படாதே" என்ற வார்த்தை 49 முறை ( ஆதி 15:1, 21:17,26:24, 35:17, நியா 4:18, 6:23, ரூத் 3:11, 1சாமு 4:20, 12:20,28:13, 2சாமு 9:7, 1இரா 17:13,2இரா 1:15,6:16, 19:6, யோபு 6:14, சங் 49:16, ஏசா 10:24, 37:6, 41:10, 41:14, 43:1, 43:5, 44:2, 54:4 எரே 30:10, 46:27,28 , புல 3:57, தானி 10:12,19, யோவே 2:21,22, செப் 3:16, ஆகா 2:5, சக 8:13,15 மத் 17:7, மாற் 5:36, லூக் 1:13,30, 5:10, 8:50, 12:32, யோவா 12:14, அப் 27:24, வெளி 1:17, 2:10) வந்துள்ளது ஆண்டவர் நேரடியாகவும், தீர்க்கதரிசிகள் , மூலமாகவும் தேவ தூதன் மூலமாகவும் அவருக்கு பிரியமான ஜனமாகிய நம்மை பார்த்து "பயப்படாதே" என்று சொல்லுகிறார்.
நாம் அனேக நேரங்களில் உலக கவலைகளால் நாம் பயந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம், என் பிள்ளையின் எதிர் காலம் என்ன ஆகுமோ, நம் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று கவலை , கடனை நினைத்து கவலை இப்படி அனேக காரியங்களை குறித்ததான கவலை நம்மிடம் உள்ளது, அதுவே பயமாக மாறி நம் வாழ்க்கையை அழித்துவிடுகிறது.
அப்படிபட்ட நிலையில் உள்ள உங்களை பார்த்து ஆண்டவராகிய இயேசு கிருஸ்து சொல்லுகிறார் "பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன்" என்க்கு அன்பான தேவ ஜனமே ஆண்டவராகிய இயோசு கிருஸ்து நமக்காகவே இந்த பூமிக்கு மனித உருவில் வந்தார் நம் பாவங்களுக்காவே அவர் உயிரையும் தந்தார், உனக்காக அவர் எல்லவற்றையும் சிலுவையில் வெற்றிச் சிறந்தார், ஆகவே நீ எதை குறித்தும் பயப்படாதே , உனக்கு ஆண்டவர் கொடுத்த வாழ்க்கையை நல்லபடியாக வழ் , நீ பயப்படக்கூடாது, கவலைப்படக்கூடாது என்பதற்காக தானே அவர் உயிரை விட்டார். இன்னும் ஏன் பயப்படுகிறாய்.
தெருவில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்று , ரோட்டோரமாக போய்கொண்டிருந்த மனிதனை துரத்தியது , அந்த மனிதன் பயந்து ஓட ஆரம்பித்தான் , நாய்க்கு சந்தோஷம் நம்மைப் பார்த்து இவன் பயந்து ஓடுகிறானென்று , அந்த வழியாக வந்த பெரியவர் இவன் ஓடுவதையும் நாய் இவனை துரத்துவதையும் பார்த்து அவர் அவனிடம் சொன்னார் ஏன் இப்படி ஓடுகிறாய் உன்னருகில் தான் அனேக கற்கள் இருக்கே அதை எடுத்து அடி என்று சொன்னார். அவன் அந்த கற்கலை எடுத்து திரும்பி நின்று அந்த நாயின் மீது அடிக்க ஆரம்பித்தான் நாய் வலி தாங்க முடியாமல் ஓடிவிட்டது.
" தேவ ஜனமே அந்த நாய்தான் பயம் என்கிற பிசாசு, அந்த கல் தான் நம் கர்த்தராகிய இயேசு கிருஸ்து , இயேசுவின் மூலம் அந்த பயத்தை மேற்க்கொள்ளுங்கள் பயம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். ஆண்டவர் உங்களோடு இருப்பர். ஆமென்
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.