செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஒரு விசுவாசியின் அன்றாட அறிக்கை



1. நான் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன். (2 கொரி 5:21)

2. நான் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறேன். ( ரோம 6:14)

3. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நான்
    நீதிமானக்கப்பட்டிருக்கிறேன். (கலா 2:16)

4. நான் தேவனுடைய பிள்ளை (ரோம 8:17)

5. தேவனுடைய பரிசுத்த ஆவி என்னில் வாசமாயிருக்கிறார் (ரோம 8:9)


6. நான் நீதிக்கு அடிமை (ரோம 6:18)

7. நான் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாயிருக்கிறேன் (2கொரி 5:17)

8. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டேன்.
     (எபே 2:37)

9. நான் முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவன் (ரோம 8:37)

10. நான் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன். (கலா 2:20)

11. நான் தேவனுடைய செய்கையாயிருக்கிறேன். (எபே 2:10)

12 .என்னை பிரியமானவருக்குள் தமக்கு சுவீகார புத்திரராகும்படி முன்
     குறித்தார் ( எபே 1: 5, 6)

13. என் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது
      (கொலோ 3:3)

14. நான் தேவனுடைய சுதந்திரம் (ரோம 8:17)

15. நான் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரம் (ரோம 8:17)

16.நான் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறேன்.

17. என்னை கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே அவரோடே கூட உட்கார
      செய்தார் (எபே 2:6)

18 கர்த்தர் என்னை வாலாக்காமல் தலையாக்கினார் (உபா 28:14)

19. கர்த்தர் என்னை கீழாக்காமல் மேலாக்கினார் ( உபா 28:14)

20. நான் தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிறேன். (1பேது 1:5)

21. தேவன் தம்முடைய சாயலிலே என்னை சிருஷ்டித்தார் (ஆதி 1:27

22. அவருடைய தழும்புகளால் நான் குணமானேன் (1 பேது 2:24)

23.அவர் திராட்சை செடி நான் கொடி (ஆகவே செடியில் என்ன சாரம்
      பாய்கிறதோ அதேதான் கொடியிலும் பாயும் ) (யோவா 15:12)

24. என்னுடைய போராட்டம் மாமிசத்தோடும் இரத்தத்தோடும் அல்ல,
      துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் பிசாசின் சேனையோடும்
      எனக்கு போராட்டம் உண்டு (எபே 6:12)

25. நான் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் (எபே 1:4)

26. அவர் என் பேரில் நினைத்திருக்கும் நினைவுகள் தீமைக்கல்ல
      நன்மைக்கே (எரோ 29:11)

27. எல்லா சூழ்நிலைகளிலேயும், எல்லா நேரத்திலேயும் அவர் கிருபை
      எனக்கு போதுமானது ( 2கொரி 12:9)

28. நித்தமும் என் தேவைகளை என் எகோவாயீரே சந்திப்பார். (பிலி 4:13)

29.  உலகத்தில் இருக்கிறவனைக் காட்டிலும் எனக்குள் இருப்பவர் மகா
      பெரியவர்.(1யோவ 4:4)

30. தேவன் என் பட்சத்தில் இருந்தால் எனக்கு விரோதமாக இருப்பவன்
      யார். (ரோம 8:31)

31. பூமியில் உள்ளவைகளை அல்ல மேலானவைகளையே நாடுவேன்
     (கொலோ 3:2)

32. உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் என்னை பூரண சமாதானத்துடன்
      காத்துக் கொள்வீர் (ஏசா 26:3)

33. தீமையை நன்மையால் வெல்லுவேன் ( ரோம 12:21)

34. என் சத்துருக்களை நான் சிநேகிப்பேன் ( மத் 5:44)

35. என்னை துன்பப்படுத்துகிறவர்களுக்காக நான் ஜெபிப்பேன் (மத் 5:44)

36. என்னை பகைக்கிறவர்களுக்கு நான் நன்மை செய்வேன் (மத் 4:44)

37. அனைத்திலும் முதலாவதாக தேவனுடைய இராஜ்ஜியத்தை தேடுவேன்
      (மத் 6.33)

38. நான் இந்த பூமிக்கு உப்பாயிருக்கிறேன் (மத் 5:13)

39. நான் இவ்வுலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறேன் (மத் 5:14)

40.பரலோகபிதா மகிமை படும்படியாக நான் நற்கிரியைகளை செய்வேன்
     (மத் 5:16)

41. கேட்பதற்கு துரிதமாயும் பேசுவதற்கு தாமதமாயும் இருப்பேன்
      (யாக் 1:19)

42. விழித்திருந்து ஜெபிப்பேன் ( எபேசி 6:18)

43. அனுதினமும் என்னை வெறுத்து சிலுவையை சுமப்பேன்( லூக் 14:27)

44. எனக்கும் என் நேசருக்குமிடையே எதையும் அனுமதிக்க மாட்டேன்.

45. தேவனுடைய முழு சர்வாயுத வர்க்கத்தை தரித்துக் கொள்வேன்
      ( எபே 6:11)

46. எல்லாவற்றிலும் அவரை மட்டும் திருப்தி செய்ய முயலுவேன்
      ( கொலோ (1:10)

47. அவரிலும் அவர் வார்த்தையிலும் மட்டும் தங்கியிருப்பேன்.
       (யோவா 15:7)

48. அவர் என்னோடு இருப்பதால் நான் தனியே இல்லை (மத் 28:20)

49. தினமும் சிலுவையை சிறிது நேரமாகிலும் தியானிப்பேன்.

50. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருப்பேன், உபத்திரவத்திலே
     பொறுமையாயிருப்பேன், ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்பேன்.
     (ரோம 12:12)

51. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே என் பெலன் ( நெகே 8:10)

52. கிறிஸ்து ஏசுவே எனக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும்,
     மீட்புமானார் (1கொரி 1:30)

53. கர்த்தர் என்னுடைய நியாயபிரமாணிகர், கர்த்தர், என்னுடைய
     நியாயாதிபதி, கர்த்தர் என் ராஜா( ஏசா 33:32)

54. என் குடியிருப்பு சமாதான தாபரமாயும், நிலையான
      வாசஸ்தலமாயும், அமைதியாய் தங்கும் இடமாயும் இருக்கும்( ஏசா 32:18)

55. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐஸ்வர்யத்தைத் தரும் அதனோடே அவர்
     வேதனையைக் கூட்டார் (நீதி 10:22)

56. நான் நிற்பது, நடப்பதும், கர்த்தரால் உறுதிப்படும் ( சங் 37:23)

57. என் வழிகள் கர்த்தருக்கு பிரியமாயிருந்தால் என் சத்துருக்களும்
     என்னோடு சமாதானமாக இருக்கும்படி செய்வார் (நீதி 16:7)

58. நான் சாவாமல் பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை
     விவரிப்பேன் (சங் 118:17)

59. மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம், ஆனால்
       கர்த்தருடைய யோசனையே நிலை நிற்கும். ( நீதி 19:21)

60. நான் அவரை நேசிக்கிறபடியால் எனக்கு சகலமும் நன்மைக்கு
     ஏதுவாகவே நடக்கும் (ரோம 8:28)

61. தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பெலனும், அன்பும்,
      தெளிந்த புத்தியையே தந்திருக்கிறார். (2தீமோ 1:7)

62. கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக எனக்குள் இருப்பதே
     அந்த இரகசியம் (கொலோ 1:27)

63. நான் கர்த்தருக்கு காத்திருப்பதால் புது பெலனடைவேன் (ஏசா 40:31)

64. என் பெலவீனத்தில் அவர் பெலன் பூரணமாய் விளங்கும். ( 2கொரி 12:9)

65. நான் பெலவீனமாய் இருக்கும் போதே பெலமுள்ளவனாய் இருக்கிறேன்
     (2கொரி 12:10)

66. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத்
     தொடரும் (சங் 23:6)

67. அவர் என்னோடு இருக்கிறபடியால் நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்
      (சங் 23:4)

68. பழிவாங்குதல் தேவனுக்குரியது (ரோம 12:19)

69. நான் ஓடினாலும் இலைப்படைவதில்லை. நடந்தாலும்
     சோர்வடைவதில்லை (ஏசா 40:31)

70. ஏசுவை நோக்கி எனக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே
      ஓடுவேன். (எபி 12:1)

71. நான் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்பேன் ( ரோமர் 1:17

72. என் ஆத்துமா வாழ்ந்திருப்பது போல் நான் எல்லாவற்றிலும் வாழ்ந்து
     சுகமாயிருப்பேன். ( 3 யோவான் 2)

73. கர்த்தரை என் முழு இருதயத்தோடும் என் முழு மனதோடும், என் முழு
      பெலத்தோடும், என் முழு ஆத்துமாவோடும் அன்பு கூறுவேன் ( மத் 22:37)

74. என்னிடத்தில் நான் அன்பு கூருவது போல நான் பிறரிடத்திலும் அன்பு
      கூருவேன் (மத் 22:39)

75. பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் என்னை
      சேதப்படுத்துவதில்லை. (சங் 12:6)

76. கர்த்தர் என்னை எல்லா தீங்கிற்க்கும் விலக்கிக் காப்பார் (சங் 121:7)

77. நான் வருகையிலும் ஆசீர்வத்க்கப்பட்டிருப்பேன், போகையிலும்
      ஆசீர்வதிக்கப்பட்டிருப்பேன் ( உபா 28:6)

78. என் கூடையும், மா பிசைகிற தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்
     ( உபா 28:5)

79. என் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். (ஏசா 54;13)

80. என் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கும் (ஏசா 54:13)

81. கர்த்தர் எல்லா தீமையினின்றும் என்னை இரட்சித்து தம்முடைய பரம
       இராஜ்ஜியத்தை அடையும்படி காப்பாற்றுவார். ( 2தீமோ 4:18

82. கர்த்தர் எனக்கு தாபரமாக கொண்டபடியால் வாதை என் கூடாரத்தை  
      அணுகாது (சங் 91:10)

83. கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருப்பேன். ( பிலி 4:4)

85. ஒன்றைக் குறித்தும் கவலைப் படமாட்டேன். (பிலி 4:6)

86. எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் என் இதயத்தையும், என்
       மனதையும் காத்துக் கொள்ளும் ( பிலி 4:7)


87. என் சிந்தைகள் உண்மையுள்ளவைகளாக, ஒழுக்கமுள்ளவைகளாக,
     நீதியுள்ளவைகளாக, கற்புள்ளவைகளாக, அன்புள்ளவைகளாக,
     நற்கீர்த்தியுள்ளவைகளாக, புண்ணியமுள்ளதாக, புகழ் உள்ளதாகவே
     இருக்கும் ( பிலி 4:8)

88. எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக கற்றுக்
     கொண்டேன் (பிலி 4:11)

89. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய
     எனக்கு பெலன் உண்டு. ( பிலி 4:13)

90. நான் முறு முறுக்கமட்டேன் ( பிலி 2:16)

91. நான் பொய் சொல்லமாட்டேன் ( கொலோ 3:9)

92.  இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும்  
      நஷ்டமென்று எண்ணுகிறேன். ( பிலி 3:8)

93. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு, எனக்கு ஆதாயம் (பிலி 1:21)

94. என் திராணிக்கு மேலாக அவை என்னை சோதிப்பதில்லை
      (1கொரி 10:12)

95. சோதனையோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும்
      உண்டாக்குவார் ( 1கொரி 10:13)

96. இக்காலத்து லேசான பாடுகள் இனிவரும் கனமான மகிமைக்கு
      ஒப்பிடத்தக்கல்ல ( 2கொரி 7:4)

97. கர்த்தர் தம்முடையவர்களை அறிவார் (2 தேமோ 2:19)

98. என் சிருஷ்டிகரே என் நாயகர். ( ஏசா 54:5)

99. நான் கர்த்தருக்கு பயப்படுகிறபடியால் அவருடைய தூதன் என்னை சூழ
      பாளையம் இறங்கி என்னை விடுவிக்கிறார். (சங் 34:7)

100. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி
        எப்போதும் என் வாயிலிருக்கும் ( சங் 34:1)

101. நான் அவருக்கு பயப்படுகிறபடியால் அவர் கண்கள் என்மேல்
       நோக்கமாயிருக்கும் (சங் 33:19)

102 கர்த்தருடைய செவிகள் என் கூக்குரலுக்கு திறந்திருக்கும் (சங் 34:15)

103. தேவன் எனக்கு அடைக்கலமும் பெலனுமானவர். ஆபத்து காலத்தில்
         எனக்கு அநுகூலமான துணையும் அவரே (சங் 46:1)

104. என் சிரசின் மேல் ஆசீர்வாதங்கள் ஒரு கிரீடத்தைப் போல் தங்கும் 
        ( நீதி 10:6)

105. அவர் தமுது வசனத்தை அனுப்பி என்னை குணமாக்குவார் (சங் 107:20)

106. பாவம், மரணம் , தரித்திரம் ஆகியவைகளிலிருந்து என்னை
        விடுவிக்கவே அவர் சாபமானார் (கலா 3:13)

107. அவர் தாமே என்னுடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு என்
        நோய்களை சுமந்தார் (ஏசா 53:4)

108. அவர் என்னை விட்டு விலகுவதுமில்லை என்னை  
        கைவிடுவதுமில்லை ( எபி 13:5)

109. எனக்கு விரோதமான மந்திரமுல்லை குறி சொல்லுவதுமில்லை.
        (எண் 23:23)

110. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனுமல்ல. மனம் மாற அவர் ஒரு
        மனுபுத்திரனுமல்ல ( எண் 23:19)

111. பரிசுத்தத்திற்கென்றே நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். ( எபே 1:4)

112. நான் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடு சகிக்க     
       அழைக்கப்பட்டிருக்கிறேன் ( 1பே 2:20)

113. நான் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். ( கலா 5:13)

114. என் மாமிசமும் அதின் ஆசை இச்சைகளும் சிலுவையில்
        அறையப்பட்டிருக்கிறது ( கலா 5:24)

115. கிறிஸ்துவுக்குள் சகல ஆசீர்வாதங்களிலும் என்னை
        ஆசீர்வதித்திருக்கிறார்.( எபே 1:4)

116. உலகத்தோற்றத்திற்க்கு முன்னே என்னை கிறிஸ்துவுக்குள் தெரிந்து
       கொண்டார் (எபே 1:4)

117. நான் எதை விதைக்கிறோனோ அதையே அறுப்பேன். ( கலா 6:7)

118. அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதை பார்க்கிலும்
        தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே நான் 
       தெரிந்து கொள்கிறேன் ( எபி 11:25)

119. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நான் கீழ்ப்படிவேன். ( எபி 13:12)

120. அமெரிக்கையும் நம்பிக்கையும் என் பெலனாயிருக்கும் (ஏச 30:15)

121. நான் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம். (சங் 1:3)

122. தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் செய்ய நினைத்தது

தடைபடாது என்று அறிந்திருக்கிறேன். ( யோபு 42:2)

123. நான் எரிச்சலடையாதிருப்பேன் ( சங் 37:1)

124. நான் கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிருப்பேன். ( சங் 37:4)

125. என் வழியை கர்த்தருக்கு ஒப்பு கொடுப்பேன் ( சங் 37:5)

126. அவர் என் இருதயத்தின் வேண்டுதல்களை எனக்கு அருள்வார்
       ( சங் 37:4)

127. என் நீதியை வெளிச்சத்தைப் போல் விளங்கப் பண்ணுவார் ( சங் 37:6)

128. என் நியாயத்தை பட்டபகலைப் போல் விளங்கப்பண்ணுவார் ( சங் 37:6)

129 துன்பமுண்டாக நான் பிள்ளைகள் பெறுவதில்லை ( ஏசா 65:23)

130. என் நரை வயது மட்டுமாய் அவர் என்னை தங்குவார் ( ஏசா 46:4)

131. இஸ்ரவேலின் பரிசுத்தர் என் வாழ்வின் நடுவில்
       பெரியவராயிருக்கிறார். ( ஏசா 12:6)

132. சேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கிறார். யாக்கோபின் தேவன்
        எனக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சங் 46:7)

133. நான் அமர்ந்திருந்து அவரே தேவன் என்று அறிந்து கொள்ளுவேன்.
        (சங் 46:10)

134. அநாதி தேவன் எனக்கு அடைக்கலம் அவர் நித்திய புயங்கள் எனக்கு
         ஆதாரம் ( உபா 33:27)

135. நான் தண்ணீர்களை கடக்கும்போது அவர் என்னோடு இருக்கிறார்.
       ( ஏசா 43:2)

136. நான் அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பேன் ( ஏசா 43:2)

137. கர்த்தரின் நாமம் பலத்த துருகம். நான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பேன்
       (நீதி 18:10)

138. கர்த்தராகிய தேவரீர் உமது அடியானின் வீட்டை ஆசீர்வதித்தபடியால்
        அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் ( 1நாளா 17:27)

139. தாவீதைப்போல் நான் என்னை கர்த்தருக்குள் திடப்படுத்திக்
        கொள்வேன்( 1 சாமு 13:6)

140. தேவனுடைய வசனத்தைக் கேட்டு அதின்படி செய்கிறவர்களே எனக்கு
         தாயும், சகோதரருமாயிருக்கிறார்கள். ( லூக் 8:21)

141. மனுஷனுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு
       முன்பாக அருவருப்பாயிருக்கிறது. ( லூக் 16:15)

142.  என்னை விரோதிக்கிறவர்கள் எவரும் எதிர்த்துபேசவும் எதிர்த்து
       நிற்க்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் எனக்கு 
      கொடுத்திருக்கிறார் (லூ 21:15)

143. அவர் நிமித்தம் நான் எல்லாராலும் பகைக்கப்படுவேன். ( லூக் 21:17)

144. நான் சத்தியத்தை அறிவேன். அந்த சத்தியம் என்னை விடுதலையாக்கி
       உள்ளது ( யோவா 8:20)

145. நான் விசுவாசிக்கிறேன். ஆகவே அவர் மகிமையைக் கண்டு
        கொண்டேயிருப்பேன். (யோவா 11:40)

147.  நான் பாவத்திற்கு மரித்து இயேசுகிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறேன்,
       ( ரோமர் 6:11)

148. பாவம் என்னை மேற்கொள்ளமாட்டாது ( ரோமர் 6:14)

149. மாமிசத்தின்படி நடவாமல் ஆவியின் படி நடக்கிற எனக்கு ஆக்கினை
        தீர்ப்பிள்ளை (ரோமர் 8:1)

150. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி
       சாவுக்கேதுவான என்னுடைய சரீரத்தையும் உயிர்பிக்க வல்லமை
       உள்ளதாயிருக்கிறது ( ரோமர் 8:11)

151. என் சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமுள்ள ஜீவ பலியாக
       ஒப்புக்கொடுக்கிறேன். (ரோமர் 12:1)

152. என்னாலான மட்டும் யாவரோடும் சமாதானமாயிருப்பேன். (ரோம 12:18)

153. கிறிஸ்துவின் ஊழியக்காரனானபடியால் அவருடைய இரகசியங்களின்
         உக்கிராணக்காரனாயிருக்கிறேன். (1கொரி 4:1)

154. இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது
       (1கொரி 3:19)

155. நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன். ( 1 கொரி 15:10)

156. சகலவிதமான ஆறுதலின் தேவனாலே எந்த சூழ்நிலையிலும் நான்
       ஆறுதல் பெறுகிறேன் ( 2 கொரி 1,3,4)

157 தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம்
       என்றும் ஆமென் என்றும் உள்ளது ( 2 கொரி 1:20)

158 நான் எப்பக்கத்தில் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை
     ( 2 கொரி 4:8)

159. நான் கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை (2 கொரி 4:8)

160. நான் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை ( 2 கொரி 4:9)

161. நான் கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகவில்லை ( 2கொரி 4:9)

162. நான் பெருக விதைத்து பெருக அறுப்பேன். ( 2கொரி 9:6)

163. நான் எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்கு கீழ்படிய சிறைபடுத்துவேன்
      (2கொரி 10:5)

164. யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தாருக்கு நான் நன்மை
        செய்வேன் ( கலா 6:10)

165. எனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாக்காதே
        போகும் ( ஏசா 54:17)

166. தேவனுடைய வழி உத்தமமானது (சங் 18:30)

167. கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ( சங் 138:8)

168. அவர் நுகம் மெதுவாயும் அவர் சுமை இலகுவாயும் இருக்கிறது
        (மத்11:30)

169. அவருடைய கற்பனைகள் பாரமானவைகளல்ல (1யோவா 5:3)

170. அவர் என்னை தன் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார், என் மதில்கள்
         எப்போதும் அவருக்கு முன்பாக இருக்கும் ( ஏசா 49:16)

171. என் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள்வேன் (நீதி 3:6)

172. அவர் என்னை பேர் சொல்லி அழைத்திருக்கிறார் ( ஏசா 45:3)

173. அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார் ( ஏசா 42:3)

174. அவர் வனாந்திரத்திலே வழியை உண்டு பண்ணுவார். ( ஏசா 4319)

175. அவர் மங்கி எரிகிற திரியை அணைக்கவும்மாட்டார், நியாயத்தை
         உண்மையாக வெளிப்படுத்துவார் ( ஏசா 42:3)

176. அவர் அவாந்திர வெளியிலே ஆறுகளை உண்டாக்குவார் ( ஏசா 43:19)

177.முந்தினவைகளை இனி நினைக்கமாட்டேன், பூர்வமானவைகளை இனி
        சிந்திக்கவும் மாட்டேன் (ஏசா 43:18)

178. பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி தேவன்
       அழைத்த பரம அழைப்பின் இலக்கை நோக்கி தொடருகிறேன்
       (பிலி 13:10)

179. நான் ஒருவரையும் சபிக்க மாட்டேன், ஆனல் ஆசீர்வதிப்பேன்
        ( 1பேது 3:9)

180.நான் சமாதானம் பண்ணுகிறவனாகயிருப்பேன். (மத் 5:9)

181. நீதியின் நிமித்தம் துன்பப்படும்போது சந்தோஷப்பட்டு களிகூருவேன்.
       ஏனெனில் பரலோகத்தில் எனக்கு மிகுதியான பலனுண்டு ( மத் 5:10,11,12)

182. நான் விசுவாசிக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில்
       ஒப்புக்கொடுத்ததை அவர் அன்னாள் வரைக்கும் காத்துக்கொல்ல
       வல்லவர் (2தீமோ 1:12)

183. நல்ல போராட்டம் போராடுவேன், விசுவாசத்தைக் காத்துக்கொள்வேன்
       ஓட்டத்தை முடிப்பேன் ( 2தீமோ 4:7)

184. காலம் வாய்த்தாலூம் வாய்க்காமல் போனாலும் திருவசனத்தை
        போதிப்பேன் ( 2தீமோ 4:2)

185. ஜீவனுக்கும், தேவபக்திக்கும் வேண்டியயாவற்றையும் அவருடைய
       திவ்விய வல்லமையானது தந்திருக்கிறது (2 பேத் 1:3)

186. தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், இராஜரீகமான ஆசாரிய
        கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்த ஜனமாயும்
        இருக்கிறவர்களில் நானும் ஒன்று (1பே 2:9)

187. அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி நான் தெரிந்து 
        கொள்ளப்பட்டேன் ( 1பேது 2:9)

188. தேவன் எனக்கு அருளின ஆறுதலினாலே நான் உபத்திரவத்தில்
       அகப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்ல திராணியுள்ளவன்.
        ( 2 கொரி 1:4)

189. சகல மனுஷராலும் அறிந்தும் வாசிக்கப்படுகிற நிரூபம் நான்
       ( 1கொரி 3:2)

190. நான் தேவனுடைய ஆலயம் (1 கொரி 3:17)

191. கர்த்தர் என்னில் அன்பு கூருகிறபடியால் என்னை சிட்சிக்கிறார்
        ( எபி 12:6)

192. ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும்
         சுதந்தரித்துக் கொள்வேன் ( எபி 6:11)

193. நான் அவருக்கு பயப்படுகிறபடியால் எனக்கு எதிலும் குறைவில்லை.
        ( சங் 34:9)

194. நான் அவரை நோக்கிப் பார்த்து பிரகாசமடைவேன்,  
        வெட்கமடைவதில்லை (சங் 34:5)

195. தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது. ஸ்தோத்திரத்தோடே
        ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படதக்கதல்ல ( 1தீமோ 4:4)

196. கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாக நிற்கும். ( சங் 33:11)

197. நான் அவரை நோக்கி கூப்பிடுவேன். நான் அறியாததும் எனக்கு
       எட்டாததுமான பெரிய காரியங்களை எனக்கு அறிவிப்பார். ( எரோ 33:3)

198. என் தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக் 1:37)

199. என் தேவனால செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை  
        ( எரே 32:17)

200. அவர் என் பாவங்களை இனி நினையாதிருப்பார் (எரெ 31:34)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.