வாலிபனே! கன்னிகையே என்னத்தை காண்கிறாய்?
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார், அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனை கிராமத்துக்கு வெளியே அழைத்துக் கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன் மேல் கைகளை வைத்து, எதையாகிலும் காண்கிறாயா? என்று கேட்டார். ( மாற் 8:22,23)
வாலவயதின் குமாரர் பலவான் கையில் உள்ள அம்புக்கு ஒப்பாக மாற்றுகிறவரும் உன் வாலிபம் எனக்கே என்று உரிமைப் பாராட்டுகிறவருமாகிய இயேசு கிறிதுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
2010 மே மாதம் 15ம் தேதி தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளுக்கு பின் டிவி செய்திகளில் வெற்றி பெற்றவர்களில் பேட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் தங்களுடைய எதிர் காலகனவுகாலச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நீங்களும் கூட அந்த பேட்டிகளை கண்டிருக்கலாம் நமக்கு இப்படியொரு வாழ்வு கிடைக்கவில்லையே என்று ஏக்கமடைந்திருக்கலாம். விரும்பிய பாடத்தை படிக்க முடியவில்லையே என முனங்கி கொன்டிருக்கலாம்.
சினிமாவில் வருகின்ற கதாநயகனைப் போல வாழ்வில் உயர முடியவில்லையே கதைநிஜமாகாதா? என உன் முகத்தை கண்ணாடியில் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கலாம். நீ விரும்பின ட்ரஸ், சூ எடுத்து உடுத்திக் கொள்ளும் அளவுக்கு உன்னிடத்தில் பணம் இல்லாமல் இருக்கலாம். நீ விரும்பின வாகனம் ரோட்டில் வீர்.. என்ற ஓசையுடன் செல்லும் போது இது என்னால் வாங்க முடியுமா? என ஏக்கப் பெருமூச்சு விட்டு கொண்டிருக்கலாம் இன்றைக்கு ஆண்டவர் உங்களைப் பார்த்துச் சொல்லுகிறார். வாலிபனே! கன்னிகையே! ஏன்னத்தைக் காண்கிறாய்.
உன் கண்கள் எதைப் பார்த்து கொண்டு இருக்கிறது. இன்றைக்கு லேட்டஸ்டாக இருக்கின்ற செல்போன் இன்னும் கொஞ்சம் நாட்கள் சென்ற பின் ஓல்டு மாடலாக மாறிவிடும், . இன்றைக்கு லேட்டஸ்டாக தோன்றுகின்ற சுடிதார் ஓல்டாக மாறிவிடும் நீ காண்பது எல்லாம் அநித்தியம்.
நித்தியமா? அநித்தியமா?
அநித்தியமானது நொடிப்பொழுதில் தேன்றி மறைந்துவிடும். அநித்தியமான பாவ சந்தோஷம் நொடிப்பொழுதில் சந்தோஷத்தை தரும். ஆனால் நித்திய காலமாக வேதனையை உண்டக்கிவிடும். அநித்தியமான பாவ சந்தோஷம் ஒரு மாடு அடிக்கப்படும்படி கொண்டு செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்கு கொண்டு போகப்படுவது போலவும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிற போலவும் இருக்கும்.
வாலிபனே! கன்னிகையே! என்னத்தை காண்கிறாய் உன் கண்களுக்கு முன்பாக தெரிவது எது? தாவீது தனக்கு முன்பாக கர்த்தரையே வைத்திருந்தான். ஆகவே அவன் அசைக்கப்படவில்லை யோசுவா இரவும் பகலும் ஆசாரிப்பு கூடாரத்தையே தனக்கு முன்பாக நிறுத்தியிருந்தான். ஆகவே ஒருவனும், ஒன்றும் எதிர்த்து நிற்க முடியவில்லை.
வாலிபனே! கன்னிகையே! உன்னுடைய தெரிந்து கொள்ளுதல் எப்படிபட்டது. நீ உயர்ந்த கல்வி படிக்கலாம். தவறில்லை, நீ உயர்ந்த பதவியை விரும்பலாம். அது பாவமில்லை, விலை உயர்ந்த வஸ்திரம், வாகனம் தேவை தான் ஆனால் உன் தகுதிக்கு மிஞ்சின ஒன்றை விரும்பினால் அது உனக்கு பாவமில்லை. ஆனால் அதை அடைய உன் இருதயம் துடிக்கும் என்றால் உன் கண்ணிமைகள் தூங்க மறுக்கும் என்றால் அதை அடைய குறுக்கு வழியை தேடுவாயென்றால் அதுவே பாவம். அந்த பாவம் உன்னை தொடந்து உன்னை பிடித்துக் கொள்ளும் நீ அதை விட நினைத்தாலும் அது உன்னை விடாது.
இன்றைக்கு உன் வாழ்வை இயேசுவுக்கு ஒப்புக்கொடு,. உன் எண்ணங்களையும் சிந்தனைகளையும் இயேசுவின் கல்வாரி சிலுவையண்டைக்கு கொண்டுவா, அலைபாயும் உனது எண்ணங்களுக்கு வசனத்தை காவல் வை. உன் கால்கள் அநித்தியமான பாவ சந்தோஷத்தை நோக்கி ஓடும்போது பரிசுத்த ஆவியின் பிரசன்னத்திற்குள் கட்டிப்போடு அப்பொழுது “என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் த்ப்புவித்தீர் நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.” (சங் 116:8,9)
“ஆயிரம் நளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்” ( சங் 84:10)
வாலிபனே! கன்னிகையே! தவீதை போல தேவனுடைய பாதத்தையும், வசனத்தையும் தெரிந்துகொள். கன்னிகையே மரியாளைப்போல. தன்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கை தெரிந்து கொள்ளுங்கள். கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்.
“இதோ இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீவாதத்தையும், சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்கு கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்.
உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்” (உபாக 11:26,27,28).