புதன், 11 ஆகஸ்ட், 2010

நோவாவின் விசுவாசம்

1. பூமியிலுள்ள எல்லா மனிதரும் துன்மார்க்கராயிருந்தார்கள் (ஆதி 6:5,6)
 நோவா மாத்திரம் நீதிமானும் உத்தமனுமாயிருந்து தேவனோடே
  சஞ்சரித்துக் கொண்டிருந்தான் ( ஆதி 6:9 , 7:1

2. நோவா தன் காலத்தில் ஒரு பேழையையும் காணவில்ல. தண்ணீரில்
    மிதந்து ஓட வேண்டிய ஒரு பெரிய கப்பலை தரையில் செய்து
    வைத்தால் அதன் உபயோகம் அவனுக்கு தெரியாது. ஜலப் பிரளயம்
    அவன் இதுவரைக் கண்டதில்லை. ஆனாலும் காணாதவைகளைக்
    குறித்துதேவ எச்சரிப்புப் பெற்று தன் குடும்பத்தை இரட்சிக்க பேழையை
    உண்டுபண்ணினான் ( எபி 11:7)

3. சகலவித துஷ்ட மிருகங்கள், பற்பல விதமான பறவை ஜாதிகள், ஊரும்
   பிராணிகள் இவைகளுடன் கூட, அந்தப் பேழையில் தன் குடும்பம் எப்படி
   ஜீவிக்கக் கூடும் என்ற விஷயத்தில், கர்த்தர் கவனித்துக் கொள்வார்
  என்று விசுவாசத்தோடு பூரணமாக நம்பினான் ( ஆதி 6: 19,20).

4. தண்டும், சுக்கானும், இயந்திரங்களும் இல்லாத இந்தக் கப்பல் தண்ணீரில்
   எப்படி முன்பின் ஓட்ட முடியும் என்பதைக் குறித்தோ அல்லது தண்ணீர்
   வடியத் தொடங்கும்போது ஏதாவது நீர்நிலைகளில் அகப்பட்டுக்
   கொண்டால் கரை சேர்வது எப்படி என்ற காரியங்களைக் குறித்த
   பிரச்சனைகளையோ கர்த்தருடைய கரங்களில் விட்டுவிட்டான்.
   (ஆதி 6:22, 7:5,6)

5. சகல மனிதரும் புசித்து குடித்து துன்மார்க்கமாய் ஜீவனம்
    பண்ணும்போது, தன் குடும்பத்துக்குத் தேவ பத்தியையும், கீழ்படிதலையும்,
   கற்பித்து, அவர்களை இரட்சிப்புக்கு வழி நடத்தினான் ( ஆதி 7:7)

6. ஜலபிரளயத்திலிருந்து இரட்சிக்கப்பட்டபின், மிருகங்களும், பறவைகளும்
    இனி கொஞ்ந்தானே இருக்கிறது என்று எண்ணாமல், அவைகளை
    பேழையிலிருந்து வெளியே விடுமுன் சுத்தமான மிருகங்களிலும்
    பறவைகளிலும் சிலவற்றை கர்த்தருக்குப் பலி செலுத்தி கர்த்தரை
    ஆராதித்தான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். (ஆதி 8:15 – 21)

                 சகோதர சகோதரிகளே நம்முடைய விசுவாசம் இப்படிப்பட்டதாய் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள், நோவாவைப் போல் மாறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

1 கருத்து:

  1. 1. பூமியிலுள்ள எல்லா மனிதரும் துன்மார்க்கராயிருந்தார்கள் (ஆதி 6:5,6)

    நோவா மாத்திரம் நீதிமானும் உத்தமனுமாயிருந்து தேவனோடே

    சஞ்சரித்துக் கொண்டிருந்தான் ( ஆதி 6:9 , 7:1)

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.