சனி, 7 ஆகஸ்ட், 2010
உலக வார்த்தையும் தேவனுடைய வசனமும்
1. உலகம்: எம்மதமும் சம்மதம்.
தேவன்: நான். நானே கர்த்தர். என்னையல்லாமல் இரட்சகர் இல்லை
(ஏசா 43:15)
2. உலகம்: எல்லாரும் இந்நாட்டு மன்னர்
தேவன்: என் இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல. யோவா 18:36
3. உலகம்: மனிதன் தன் சூழ்நிலைக்கேற்றவாறு தனுடைய வாழ்க்கையை
மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்
தேவன்: நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல்.
உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர்12:2)
4. உலகம்: உழுபவனுக்கே நிலம் சொந்தம்
தேவன்: பூமியும் அதன் நிரைவும் , உலகமும் அதிலுள்ள குடிகளும்
கர்த்தருடையது (சங் 24:1)
5. உலகம்: சுபிட்சமான நல்வாழ்வு உதயமாக முதலாவது ஒவ்வொரு
மனிதனுக்கும் உணவு,உடை,உறவிடம் ஆகியவை அளிக்கப்பட
வேண்டும்
தேவன்: முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய
நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம்
உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33)
6. உலகம்: அணு ஆயுதங்களை தடை செய்தால் தான் யுத்த அபாயம் நீங்கி
உலகில் சமாதானம் உண்டாகும்
தேவன்: சமாதானத்தின் வழியை அவர்கள் அறியார்கள் (ரோமர் 3:17)
என்னுடைய சமாதானத்தையே உஙக்ளுக்கு கொடுக்கிறேன்.
உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக்
கொடுக்கிறதில்லை (யோவா 14:27)
7. உலகம்: சன்மார்க்க ஜீவியத்தின் மூலம் மனிதன் முக்தியடைய முடியும்.
தேவன்: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய
ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே நான்
உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 3:3,4)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.