ஆவியின் கனிகள்
ஆவியின் கனிகள் என்றால் என்ன ?
நாம் வேதத்தை புரட்டி பார்த்தால் அப்போஸ்தலராகிய பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருமத்தில் அன்பு, சந்தோசம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் (கலா 5 :22 ) ஆகியவற்றை பற்றி கூறியுள்ளார். நம்முடைய வாழ்வு எப்பொழுதும் கனி கொடுக்கிற ஜீவியமாக இருக்கவேண்டும். என்று கர்த்தராகிய இயேசு கிருஸ்து எதிர்பார்க்கிறார். ஒவ்வொன்றாக பார்ப்போம்
1 அன்பு:
அன்பை பற்றி புதிய ஏற்பாட்டில் அதிக இடங்களில் நாம் காணமுடியும்
அன்பு இரண்டு வகையாக உள்ளது
1. நாம் தேவனிடத்தில் அன்பு செலுத்துவது
2. நாம் மனிதரிடத்தில் அன்பு செலுத்துவது
1.நாம் தேவனிடத்தில் அன்பு செலுத்துவது
முதலாவது நாம் தேவனிடத்தில் அன்பு சொலுத்துவது பற்றி பார்ப்போம் பழைய ஏற்பாடு காலத்தில் இதை பற்றி அதிகமாக தேவ மனிதர்கள் கூறியுள்ளார்கள்
மேலும் ஆண்டவரே நேரிடையாக வந்தும் தீர்க்கதரிசிகள் முழமாகவும் சொல்லியுள்ளார். தேவனிடத்தில் நாம் அன்பு கூறும்பொழுது அவர் நமக்கு இரக்கம் செய்கிறவராக இருக்கிறார் “ என்னிடத்தில் அன்பு கூர்ந்து என் கற்பனைகளை கைகொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவறாயிருக்கிறேன். (யாத் 20:6) (உபா 5:10)
என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே மேலும் ஆண்டவர் உண்மையான அன்பை எதிர்பார்க்கிறார். நாம் ஆண்டவரிடம் அன்பு செலுத்தினால் இதை பெற்றுக்கொள்ளலாம் , இந்த தேவை நமக்கு நிறைவேறும் என்று இல்லாமல் உண்மையான அன்பை எதிர்பார்க்கிறார்.
நமக்கு ஒரு குழந்தை பிறக்கிறது அது வளரும் போது நம் மீது அன்பாயிருக்கவேண்டும் , நம்மை கண்டதும் பாசத்தோடு அம்மா அல்லது அப்பா என்று ஓடி வரவேண்டும் என்று நினைக்கிறோம் , இதையே தான் தேவனும் நினக்கிறார் நான் உருவாக்கிய என் மகள் என் மகன் என் மீது அன்பாய் இருக்க வேண்டும் என்று தவிக்கிறார்
இதையே தான் உபாகமம் 6:5 – ல் “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக” என்று கூறியுள்ளார்.
தேவனிடத்தில் நாம் கள்ளம் கபடம் இல்லாத அன்பு செலுத்தினாலே ஆன்டவர் நாம் கேட்பது அல்லது வாஞ்சிப்பது அனைத்தையும் தருகிறார்.
“ நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்க்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” (எபே 3:20) மிகவும் அதிகமாய் நமக்கு செய்வார்.
நான் மனிதரிடத்தில் அன்பு செலுத்துவது
ஆண்டவர் நம்மீது எப்படி அன்பு செலுத்தவேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அப்படியே நாமும் பிறர் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று இயேசுகிருஸ்து விரும்புகிறார்.
என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே “ இந்த உலகம் உண்டானது தேவனால் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உலகத்தில் உள்ள அனைத்தும் தேவனுடையது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்காளா? அப்படியானால் தேவன் படைத்த மற்ற மனிதர்களையும் நீங்கள் அன்பு கூற வேண்டும் .
“உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக” ( மத்19:19)
கர்த்தராகிய இயேசுவும் நம்மீது அன்பு வைத்ததினால் தான் இவ்வுலகிற்கு வந்தார்,பாடுகள்பட்டார், “ தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார் ( யோவா 13:1)
“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் ந்ன் கற்பனைகளை கைகொள்ளுங்கள் (யோவா 14:15)
ஆகவே தேவனுடைய பிள்ளைகளே ஒருவரிலொருவர் அன்போடு இருந்து தேவனின் அன்பை பெற்றுகொள்ளுங்கள்.
சந்தோஷம்
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எப்பொழுதும் மனமகிழ்சியுடன் இருக்கவேண்டும்
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் (1தெசோ 5:16) . என்ன பிரச்சனை வந்தாலும் நாம் மிக சந்தோஷமாயிருக்கவேண்டும். அந்த பிரச்சனையை தேவனிடத்தில் ஜெபம் மூலம் தெரியபடுத்திவிட்டு நாம் அமைதலாக இருப்போம் “ கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத் 14:14), ஆண்டவரே நமக்காக யுத்தம் செய்யும் போதும் நாம் ஏன் கவலைப் படவேண்டும் தேவனிடத்தில் பொறுப்பை விட்டுவிட்டு நாம் சந்தோஷமாக இருப்போம்.
சமாதானம்
நாம் அனைவருடனும் சன்டையில்லாமல் சமாதானத்துடன் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார், சமாதானம் என்பது தேவனாலே உண்டாகிறது சங்கீதகாரன் தாவீது சொல்லும் போது “ கர்த்தர் தம் ஜனத்திற்கு பெலன் கொடுப்பார்; கர்த்தர் தம் ஜனத்திற்கு சமாதானம் அருளி அவர்களை ஆசிர்வதிப்பார் (சங் 29:11)
“துன்மார்கருக்கோ சமாதானம் இல்லை” (ஏசா 48:32) என்று ஏசாயா தீர்கதரிசி மூலம் ஆண்டவர் சொல்லுகிறார் . ஆகையால் தேவ ஜனமே நாம் எப்பொழுதும் சமாதானத்துடன் இருப்போம்.
நீடியாபொறுமை
தேவனிடத்தில் நாம் பொருமையுடன் காத்திருப்பது அவசியம். “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்” (சங் 40:1) என்று சங்கீதகாரன் தாவீது சொல்லுகிறார். . நாமும் ஆண்டவரிடத்தில் ஒன்றை கேட்டோமானல் அது கிடைக்கும் என்று பொறுமையுடன் இருப்போம். அதேபோல் ஒரு சில பேர் ஆண்டவர் எனக்கு வாகுத்தத்தம் பண்ணினார் ஆனால் இன்னும் நிறைவேரவில்லை என்று சொல்லுவார்கள். ஆண்டவர் வாக்கு மாறாதவர் . நான் சொல்லியும் செயாதிருப்பேனோ என்கிறார், நாம் செய்ய வேண்டியது மிக பொறுமையுடம் காத்திருப்பது.
தயவு
ஆண்டவருடைய தயவுக்காக நாம் காத்திருக்க வேண்டும் , இயேசு கிருஸ்து நம் மீது தயவு காட்டும் வரை நாம் அவரை விட கூடாது அவருடைய பாதத்தை பிடித்துக்கொண்டு என்னை ஆசிர்வதியும் ஆண்டவரே என்று யாக்கோபு கேட்டது போல் தேவனிடத்தில் மன்றாரட வேண்டும். தேவன் நிச்சயம் நமக்கு செய்வார்.
“கர்த்தாவே உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக “(சங் 119:41)
முழு இருதயத்தோடும் உம்முடைய தவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி இரங்கும்” (சங் 119:58 ) இப்படியாக தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறார் நாமும் மன்றாடி தேவனுடைய தயவை பெற்றுக்கொள்வோம்.
நற்குணம்
தன்னுடைய நற்குனத்தினால் தான் ரூத் தன்னுடைய ஜனங்களை மீட்க முடிந்தது “உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது “(ரூத் 3:10)அவளுடைய நற்குனமே அவளுக்கு ஆசிர்வாதத்தை பெற்றுத்தந்தது.
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆவியின் கனிகள் என்று சொல்லப்பட இல்லை ஆவியின் கனி
பதிலளிநீக்கு