அழுகையின் பள்ளத் தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கி கொள்ளுகிறார்கள். (சங் 84:6)
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இன்றைக்கு அநேக ஜனங்களுடைய வாழ்வில் காணப்படுவது கண்ணீர் கண்ணீரே எனக்கு உணவாயிற்று என்று புலம்பும் ஜனங்களே ஏராளம். அழுகையே எனக்கு வாழ்வாயிற்று என்று கதறும் ஜனங்கள் அதிகம்.
தேவஜனமே! சோர்ந்து பேகாதிருங்கள் உங்கள் கண்ணீரை களிப்பாக மாற்றும் இயேசு உங்களுக்கு ஒரு நீரூற்றை உண்டாக்குவார்.
மத் 14:33 ல் இயேசு தம்முடைய சீஷர்களை படகில் ஏறி தமக்கு முன்னே அக்கரைக்கு போகும்படி துரிதப்படுத்தினார். அது ஒரு சாயங்கால நேரமாக இருந்தது சீஷர்கள் படகில் பிரயாணம் செய்தார்கள். நடுக்கடலில் சேர்ந்தபோது எதிர்காற்றாய் இருந்தபடியால் படகு அலைகலீனால் அலைப்பட்டது.
தேவஜனமே! உங்கள் வாழ்வில் கூட உங்களது காரியங்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக இருக்கலாம். எதிர் நீச்சல் அடித்து நீங்கள் சேர வேண்டிய கரை உங்களது கண்களுக்கு தூரமாக இருக்கலாம். வெற்றி என்பது உங்களுடைய கண்களுக்கு தொலைவில் இருப்பதாக தோன்றலாம். இனி என்னால் முடியாது என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு இருக்கலாம். பிசாசின் சீற்றங்கள் உங்கள் மேல் பலமாக மோதியடிக்கலாம், தளர்ந்து போகாதிருங்கள்.
இன்றைக்கு அனேகரது இருதயத்தில் உள்ள காரியங்கள் ஆண்டவர் ஏன் என்னை கைவிட்டுவிட்டார்? ஏன் எனக்கு உதவி செய்யவில்லை ? என்னுடைய ஜெபத்திற்கு ஏன் பதில் தரவில்லை? தோல்வியை, நஷ்டத்தை ஏன் எனக்கு அனுமதித்தார்? என கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருப்பார்கள்.
தேவஜனமே! சீஷர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி படகில் ஏறி வரவில்லை. இயேசு அவர்களை அக்கரைக்கு போகும்படி துரிதப்படுத்தினார். அக்கரைக்கு போங்கள் என்று சொன்னவர் எந்த இடத்திற்கு போக வேண்டும் என்பதையும் சொல்லியிருப்பார்.
சீஷர்களை அக்கரைக்கு போங்கள் என்று சொன்ன தேவன் உண்மையுள்ளவர். நாலாம் ஜாமத்திற்கு முந்தின நேரம் சீஷர்களுக்கு என்ன நடக்கும் என்று தேவன் அறிந்திருந்தார். அவரது பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவர் நாம் இப்போது கடந்து போகும் வழியையும் அறிந்துள்ளார்.
தேவஜனமே! ஆவர் விரும்புகின்ற பாதையில் நாம் நடக்கிறோமா? அவர் செய்ய சொன்ன காரியத்தை செய்கின்றோமா? உங்களது வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் தேவன் விரும்புகின்ற காரியத்தை மட்டும் செய்கிறீர்களா? உங்களது தொழில், படிப்பு, திருமணம் இன்னும் உங்களுடைய ஒவ்வொரு தனிப்பட்ட காரியத்திலும் தேவன் விரும்புகின்ற, சொல்லுகின்ற காரியத்தை மட்டும் நீங்கள் செய்தால் நீங்கள் போகும் பாதையின் எல்லாக் காரியத்தையும் தேவன் நேர்த்தியாக செய்வார்.
ஆபத்துக்கள் சூழ்ந்து கொள்ளும்போது தம்முடைய சிறகுகளினாலே உங்களை மூடுவார். வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நேய்க்கும் உங்களை தப்புவிப்பார். உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உனது வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது.
தேவஜனமே! ஈசாக்கை தேவன் நூறுமடங்கு ஆசிர்வதிப்பதற்கு முண்பு கர்த்தர் அவனுக்கு தரிசமாகி: நீ எகிப்து தேசத்திற்குபோகாமல் நான் உனக்கு சொல்லும் தேசத்தில் குடியிரு என்றார் (ஆதி 26:2)
ஈசாக்கு தேவன் தனக்கு கட்டளையிட்டபடியே இருந்தான். நூறு மடங்கு தேவன் அவனை ஆசீர்வதிதார். அவன் வெட்டின துரவுகளிளெல்லாம், சுரக்கின்ற நீரூற்றைக் கண்டான்.
தேவஜனமே! நீங்கள் ஒவ்வொரு காரியத்திலும், செயலிலும் தேவன் விரும்புகிற காரியத்தில் கீழ்படிந்து செயல்படுங்கள். அப்பொழுது அற்புதங்களை காண்பீர்கள்.
எனக்கு எல்லாம் தெரியும் என்னுடைய இஷ்டத்திற்குதான் திருமணம் செய்வேன், நான் விரும்பினபடி தான் படிப்பேன் என நீங்கள் நினைத்து செயல்பட்டால், அதினால் உண்டாகிற ஆபத்துக்களையும் தீமைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும்.
தேவஜனமே! நாம் சுதந்திர இந்தியாவில் தான் இருந்தாலும் சுதந்திரமாக செயல்பட நமக்கு சுதந்திரம் இல்லை. ஏனெனில் நாம் தேவ சாயலின்படி சிருஷ்டிக்கப்பட்டு இருப்பதால் தேவன் நடத்துகின்ற பாதையில் தான் நடக்கவேண்டும்.
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு ஆகிலும் எல்லாம் எனக்கு தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆகிலும் நான் ஒன்றுக்கும் அடிமைப்படமாட்டேன். (1கொரி 6:12)
தேவஜனமே! உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தேவனுடைய வழிநடத்துதலை அறிந்து கொள்ளவேண்டும்.
அதற்குள்ளாகப் படவு நடுக் கடலிலே சேர்ந்து எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுப்பட்டது. இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின் மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார் (மத் 14:24,25)
தேவஜனமே! சீஷர்களை அக்கரைக்கு போகும்படி துரிதப்படுத்தின இயேசு அவர்கள் போகும் பாதையில் உண்டான எதிர்ப்புகளை அறிந்திருந்தார். எதிகாற்று வீசப்போகின்ற நேரத்தையும் அறிந்திருக்கிறார். உங்கள் வாழ்வில் நீங்கள் கடக்கப் போகும் எல்லா போராட்டங்களையும், உங்களை எதிர்க்கப் போகும் எல்லா சவால்களையும் தேவன் அறிந்திருக்கிறார்.
தேவஜனமே! உங்கள் வாழ்வில் எதிர்காற்றினால் தண்டு வழித்து, தண்டு வ்ழித்து சோர்ந்து போனீர்களா? கண்ணீரின் பள்ளத்தாக்கை கடக்க முடியவில்லையா? வியாதியின் போராட்டமா? மரண இருளின் பள்ளத்தாக்கா? சான் ஏரினால் முழம் சறுக்குகின்றதா? நீங்கள் தோண்டுகின்ற துரவுகளை மனிதர்கள் மண்ணைப்போட்டு மூடிவிடுகிறார்களா?
தேவஜனமே! சோர்ந்து போகாதிருங்கள். இதோ சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களை சந்திக்க வருகின்றார். உங்களுக்காக யாவையும் செய்துமுடிப்பார். உங்கள் பட்சத்தில் கொடியேற்ற தேவன் வருகின்றார். மனிதர்கள் உதவி செய்ய முடியாத நாலாம் ஜாமதில் மனிதர்களும் உறவுகளும் வரமுடியாத நடுகடலில் உங்களுக்கு உதவி செய்யவும் உங்கள் சவால்களை சந்திக்கவும் இயேசு இருக்கிறார் பயப்படாதேயுங்கள்.
உங்களுக்கு விரோதமாக எழும்பின காற்றையும், கடலையும் அதட்டி இரையாதே, அமைதலாயிரு என்று கட்டளையிட இயேசு வருகிறார். உங்களுக்கு எதிர்த்து நிற்கின்ற எல்லா சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக மாறும், உங்கள் இருள் வெளிச்சமாகும்.
உங்களுக்கு விரோதமாக எழும்பின பிசாசின் வல்லமைகளை இரையாதே, அமைதலாயிரு என்று இயேசு கட்டளையிடுகிறார். வாழ்வின் போராட்டங்களைக் கண்டு கலங்கி மலைத்து இருக்கிறீர்களா? மரியாளைப் போல இது எப்படியாகும்? என கலங்குகிறீர்களா? மார்த்தாளை போல ஆண்டவரே நீ இங்கே இருந்திருப்பீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என கண்ணீர் வடிக்கின்றீகளா? சோர்ந்து போகாதிருங்கள்.
தேவஜனமே! உங்களுக்கு இந்த நாட்கள் நாலாம் ஜாமம், இந்த உழியத்தை செய், இந்த தொழிலை செய், உன் வீட்டை கட்டு , என் காரியாமாய் புறப்பட்டு போ என்று சொல்லி உங்களை துரிதப்படுதினவர் நீங்கள் வ்ழியில் சந்திக்கின்ற ஆபத்துகளில் உங்களுக்கு உதவி செய்யும்படியும் உங்கள் ஜீவன் தப்புவிக்கும்படியும் புறப்பட்ட உங்கள் காரியத்தில் உங்களுக்கு ஜெயம் தரும்படி இயேசு உங்களிடத்தில் வருகிறார்.
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள், உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும் , உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். (ஏசா 35:3,4)
சவால்களை சந்தியுங்கள்
இன்றைக்கு அநேகர் போராட்டங்கள், நெருக்கங்கள், பாடுகள், நஷ்டங்கள், இவைகளை சந்திக்க வேண்டிய நிலைகள் வந்தவுடன் பயப்படுகிறோம் , கலங்கிவிடுகிறோம் என்ன நடக்குமோ? என்னச் செய்யப் போகிறோம் என பயந்து விடுகிறோம். சீஷர்கள் எல்லாரும் இப்படி தான் பயந்தார்கள். ஆனால் இயேசு தான் கடலில் நடக்கிறார் என்பதை அறிந்து பேதுரு, ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வர கட்டளையிடும் என்றான்.
தேவஜனமே! உங்களது பிள்ளைகள் தரையிலிருந்து கடலுக்குள் சில அடி தூரம் நடந்து சென்று வர நீங்கள் அனுமதி கொடுப்பீர்களா? ஐயோ ஐயோ வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்கள். சீஷர்கள் படகில் நடுக்கடலில் இருக்கிறார்கள் நடுக்கடல் எந்தனை ஆயிரம் அடிகல் ஆழம் இருந்திருக்கும். இவையெல்லாம் அறிந்த பேதுரு ஆண்டவரே! நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வர எனக்கு கட்டளையிடும் என்று கேட்கிறான். இயேசு கிறிஸ்துவும் வா என்கிறார் பேதுரு நடந்து செல்கின்றான்.
தேவஜனமே! பேதுரு மீன் பிடிக்கின்ற தொழில் செய்தவன் கடலும் அதின் அலையும் காற்றும் அவருக்கு புதிதல்ல ஆனால் நடுக்கடலில் நடக்கின்ற அனுபவம் பேதுருவுக்கு புதிது. நடுக்கடலில் நடப்பது பேதுருவின் பெலத்திற்குட்பட்டது அல்ல. படகில் இருந்து ஒரு காலை எடுத்து தண்ணீரின் மேல் வைப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு காரியமாக இருக்கிறது. ஆன்டவர் பேதுருவைப் பார்த்து, வேண்டாம் பேதுரு உன்னால் முடியாது நீ அங்கேயே இரு நான் வந்து உனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லவில்லை.
ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளை கோழையாக, பயந்த சுபாவமுள்ளவர்களாக வைக்க விரும்பவில்லை, தைரியம் உள்ளவர்களாக எந்த சூழ்நிலைகளையும் மேற்கொள்ளும் பலசாலிகளாக வைக்க விரும்புகிறார்.
தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். (1தீமோ 1:7)
அப்பொழுது,, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல நோய்களை நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் (மத் 10:1)
தேவஜனமே! தேவன் உங்களுக்கு சகல அதிகாரங்களையும் கொடுத்திருக்கிறார். தேவன் மோசேயை பார்த்து “ நீ உன் கோலை ஓங்கி உன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்து விடு என்று யாத்திராகமம் 14:16ல் வாசிக்கிறோம் கர்த்தர் சொன்னப்படியே மோசே செய்தார்.
ஜலம் பிரிந்து போயிற்று என்று 21ம் வசனத்தில் வாசிக்கின்றோம். தேவன் யோசுவாவைப் பார்த்து: புரண்டு ஓடுகின்ற யோர்தானில் உடன்படிக்கைப்பெட்டியை சுமக்கின்ற ஆசாரியர்கள் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே யோர்தானின் தண்ணீர் ஓடாமல் குவியலாக நிற்கும் என்றார். “ கர்த்தர் சொன்னபடியே நடந்தது” ( யோசு 3:15,16)
தேவஜனமே! சகல அதிகாரங்களை தேவன் உங்களுக்கு தந்திருக்கிறார். உங்களுக்குள் இயேசு கிறிஸ்து இருக்கிறார். ஆகவே உங்களது சூழ்நிலைகளை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும் .
இயேசு கிறிஸ்துவின் மேல் உங்களது நம்பிக்கை முழுமையாக இருக்கட்டும். நீங்கள் விசுவாசித்தால் உங்களால் விலங்கி கொள்ள முடியாத எல்லையிலும் உங்களால் செயல்பட முடியாத எல்ல்லையிலும் தேவன் செயல்பட முடியும்.
இயேசு கிறிஸ்து பேதுருவை பார்த்து கடலின் மேல் நடந்து வா என்று கூப்பிட்டவுடன் என்னால் எப்படி நடுக்கடலில் நடக்க முடியும் கடலின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்று மனக்கணக்கு போடவில்லை. இயேசு கிறிஸ்து வா என்று சொல்லி விட்டார் நான் போகிறேன் என்று போக புறப்பட்டான்.
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! (சங்கீ 144:1)
நம்முடைய தேவன் நம்மை எல்லாவற்றிலும் பழக்குவிக்கிறவர். தண்ணீரை பிளக்கச்செய்து நம்மை நடக்கவைப்பார். தண்ணீரின் ஆழத்தில் கொண்டு போய் நம்மை பழக்குவிப்பார் வளமான இடத்திலும் பழக்குவிப்பார், வனாந்தரத்திலும் பழக்குவிப்பார். வாழ்ந்திருக்கவும் தாழ்ந்திருக்கவும், பரிபூரணபடவும், பட்டினியாக இருக்கவும் நமக்கு கற்றுத் தருவார். நாம் எல்லாநிலையிலும் இயேசுவை நோக்கி பார்க்கவேண்டும்.
பேதுரு இயேசுவை நோக்கிப் பார்த்து நடந்த போது தண்ணீரின் மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதை கண்ட போது தண்ணீரில் அமிழ்ந்து போகையில் ஆண்டவரே என்னை இரட்சியும் என கூப்பிட்டன் தனது ஜீவனை இரட்சித்துக் கொண்டான். நீங்களும் கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவகடந்து அதை நீரூற்றாக்கி கொள்ளுவீர்கள்.
கண்ணீரின் நீரூற்றை காணாமல் களிப்பான நீரூற்றை காணமுடிந்தது சிவந்த சமுத்திரத்தையும், யோர்தானையும், வனாந்தரத்தையும் கடக்காமல் பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை உங்களால் காணவும் முடியாது சுதந்தரிக்கவும் முடியாது.
அன்னாள் மலடி என்கின்ற கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து தீர்க்கதரிசியின் தாய் என்கின்ற நீரூற்றை கண்டாள். சாத்ராக், மேசாக் மற்றும் ஆபத்நேகோ ஏழுமடங்கு சூடாக்கப்பட்ட அக்கினிசூளையை கடந்து பாபிலோன் தேசத்தின் உயர் பதவியை அடைந்தார்கள்.
சிலுவையில்லாமல் இரட்சிப்பு இல்லை. பாடுகள் இல்லாமல் பரலோகம் இல்லை, சிரமங்களை கடக்காமல் சிகரங்களை தொடமுடியாது. பாடுகளிலும் கண்ணீரிலும் தோல்விகளிலும் களிப்பான் நீரூற்றைத் தேவன் தருவார்.
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து களிப்பான நீரூற்றுகளை காண இரண்டு காரியத்தை செய்யவேண்டும்.
எப்பொழுதும் தேவனை துதிக்கவேண்டும்
தேவனுடைய பிரசனத்தில் உங்களுடைய பொன்னான நேரங்களை செலவழிக்க வேண்டும். தாவீது கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் . அவர் துதி எப்பொழுதும் என் வாயிலிருக்கும் என்றான். தேவனுடைய இன்பமான பிரசனத்தை எப்பொழுதும் அனுபவிக்க வேண்டும். உங்கள் இருதயமும், மாம்சமும் தேவனை நோக்கி கெம்பீர சத்தமிட வேண்டும். சத்தமிட்டு கர்த்தரை பாடி துதிக்க வேண்டும்.
கர்த்தருக்குள் பெலன் கொள்ள வேண்டும்
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புது பெலன் அடைந்து செட்டைகளையடித்து உயரே எழும்புவார்கள். ஓடினாலும் களைப்படையார்கள். நடந்தாலும் சோர்வடையார்கள். கர்த்தருடைய பெலன் உங்களுக்குள் இருந்தால் தான் சகல துரைத்தனங்களையும், வியாதிகளையும், பிசாசின் வல்லமைகளையும் மேற்கொள்ள முடியும்.
கர்த்தருடைய பிரசன்னமும் தேவ பெலனும் நமக்குள் இருந்தால்தான் கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்ளமுடியும்.
உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக் கொண்டிருப்பார்கள்.
உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷன் , தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளதாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் பலத்தின் மேல் பலம் அடைந்து. சீயோனிலே தேவ சந்நிதியில் வந்து காணப்படும் (சங் 83:4..7)
செய்தி
சகோ. A. ஜான்சன்
இயேசுவே ஆறுதல் ஊழியம்
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.