யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்

யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்


“கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?

“உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் தனே.
“அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

“ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்: கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம் பண்ணுகிறான்: ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

"தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும் ,குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.” (சங்கீதம் 15:1-15)

என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே, இந்த 15ஆம் சங்கீதம் தாவீதால் எழுதப்பட்டது விசேஷவிதமாக தேவனோடு கூட உலாவுவதற்கு, கர்த்தருடைய பர்வதத்தில் வாசம் பண்ணுவதற்கு, அவரோடு தங்குவதற்கு, அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு இவை எல்லாவற்றிற்கும் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வி எல்லாருடைய உள்ளத்திலும் இருக்கிறது.


நான் எப்படி தேவனோடு உலாவ வேண்டும்? நான் என்ன செய்தால் தேவனுடைய வார்த்தையைக் கேட்க முடியும்? எப்போது அவருடைய குரலைக் கேட்க முடியும்? அவரோடு கூட எப்படி என்னால் பழக முடியும்? என்ற வாஞ்சை எல்லோருடைய் உள்ளத்திலும் இருக்கிறது.

தேவனோடு உலாவ, அவ்ருடைய கூடாரத்தில் சென்று தங்க, அவருடைய பர்வதத்திற்கு ஏறி வாசம் பண்ண நமக்கு இந்த 15ஆம் சங்கீதம் போதுமானதாயிருக்கிறது. என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே மோசே தேவனுடைய பர்வதத்தில் ஏறி தேவனுடைய சமூகத்தில் காத்திருந்தார். மோசே போய் தேவனிடம் காத்திருந்ததற்கு என்ன காரியம் உதவியாய் இருந்திருக்கும்? அதே போல சங்கீதக்காரன் சொல்லுகிறான், யார் கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணூவான்? என்று கேள்விகளைக் கேட்டு அதற்குரிய எல்லா பதில்களையும் இந்த சங்கீதத்திலே எழுதியிருக்கிறார்.

கீழ்காணும் காரியங்களைக் கவனமாகப் படித்து தியானியுங்கள்.

1உத்தமனாய் நடக்கவேண்டும்!

தேவன் நமக்குக் கட்டளைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் கொடுத்து நம்மை நத்துகிறார். முன்பு தேவன் ஆபிரகாமைச் சந்தித்த பொழுது, “நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாய் இரு” என்று சொன்னார். (ஆதி 17:1)

மனிதனுடைய மனதிலும் இருதயத்திலும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பும் அவனுடைய மாம்சத்திலே நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற கிரியை இருந்து வந்தது. எனவே தான் மனச்சாட்சியின் காலத்தைத் தேவன் ஏற்படுத்தியிருந்தார். இன்றைக்கும் நியாயப்பிரமாணத்தைப் படித்து அறியாத உலகப் பிரகாரமான அதிகாரிகள் கூட நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவர்களாய் இருக்கிறார்கள். “பொய் சொல்லாதிருப்பாயாக” என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது. உலகப்பிரகாரமான அதிகாரிகள் குற்றவாளிகளை ஏன் பொய் சொல்லுகிறாய்? எனக் கூறிப் பிடித்துச் செல்லுகிறார்கள். ஆண்டவருடைய வார்த்தை சொலுகிறது “ விபச்சாரம் செய்யாதிருப்பாயாக…..” இந்தப் பிரகாணங்களையெல்லாம் ஒரு அதிகாரிக்கோ, நாம் சொல்லத் தேவையில்ல. சாதாரணமாக அவரிகளுக்கே தெரியும் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக் கூடாது என்று இவர்களுக்கு நியாயப்பிரமாணம் கற்பிக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்குள்ளும் நியாயப்பிரமாணம் இருக்கிறது.

தேவன் எல்லாருக்கும் மனச்சாட்சியை வைத்து, நியாயப்பிரமாணத்தைக் கற்பிக்காவிட்டாலும், அவர்கள் அறியாவிட்டலும் அவர்களில் நியாயப்பிரமாணத்தைத் தேவன் காண்கிறார். ஆபிரகாமுக்குத் தேவன் 10 கட்டளைகளைக் கொடுத்து “எனக்கு உத்தமனாயிரு” என்று சொல்லவில்ல. “உன் மனச்சாட்சிக்கு எது தவறு என்று தெரிகிறதோ அங்குப் போகாதே, எனக்கு முன்பாக உத்தமாயிரு” என்குறார். மனச்சாட்சியின் காலத்தில் வாழ்ந்தவர்களிடம், அவர்கள் மனச்சாட்சிக்கு ஏற்ற பிரகாரமாய் வாழ வேண்டுமெனத் தேவன் எதிர்பார்த்தார்.

என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே, பாவம் என்பது மனச்சாட்சியினாலே வகையறுக்கப்பட்டுள்ளது. எனவே தான் தேவன், “ நீ நன்மை செய்தால் (உனக்கு) மேன்மை இல்லையோ? நீ நன்மை செயாதிருந்தால் பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும்” என்று சொன்னார். ( ஆதி 4:7)

மனச்சாட்சியின் காலமானாலும், நியாயப்பிரமாணத்தின் காலமானாலும், ராஜரீகப் பிரமாணத்தின் காலமானாலும், தேவன் எதிபார்க்கிற ஒரே காரியம் நீங்கள் உத்தமாய் நடந்தால் அவரோடு சஞ்சரிக்கலாம். முதல் காரியம் உத்தமானாய் நடக்கவேண்டும்.


2. நீதியை நடப்பிக்க வேண்டும்!


நாம் நீதியை நடப்பிட்த்தால் தான் தேவனோடு கூட நடக்க முடியும், தேவனோடு கூட உலாவ முடியும். ஏனென்றால் தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரம் நீதியும்,, நியாயமுமாயிருக்கிறது. தேவனுடைய கிருபாசனத்தண்டை எல்லாரும் சேரலாம். அவர் நீதியும், நியாயமும் உள்ளவராய், நீதியின் சூரியனுமாய் இருக்கிறார். அந்த மகிமையுள்ளவரை நாம் தரிசிக்க வேண்டும், அவரோடு கூட உலாவ வேண்டுமென்றால் நாம் கண்டிப்பாக நீதியை நடப்பிக்கிறவர்களாக இருக்கவேண்டும்.

கிருபையும், சத்தியமும் நிறைந்தவராய் இயேசு பூமியில் உலாவினார். இயேசு கிருபை நிறைந்ததினால்தான் பாவிகள் அவர் அருகில் வரமுடிந்தது. மனுஷருக்குக் காணப்பட வேண்டும் என்பதற்காக அந்த நியமத்தின்படி வெளிப்பட்டார். அதே நேரத்தில் கர்த்தருடைய பர்வத்திற்கு ஏர வேண்டும் என்றால் அதற்குத் தேவன் சில காரியங்களை வைத்திருக்கிறார்.

ஆண்டவர் மறுரூப மலையில் அவருடைய சீஷர்கள் 12 பேரையும் கூட்டிக் கொண்டு சென்று அவர்களுக்கு முன்பாக மறுரூபம் ஆகவில்லை. ஆவர் பேதுரு, யாக்கோபு, யோவானை மட்டும் கூட்டிக் கொண்டு போய் அவர்களுக்கு முன்பு மறுரூபமானார். ஆனால் யாரால் மாத்திரம் தான் மறு ரூபமாவதைப் பார்க்க முடியும் என அவருக்குத் தெரியும்.

அந்த நேரத்தில் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எல்லோரும் மறுரூபமாகவில்லை. மோசேயும், எலியாவும் மட்டும் அவரோடு கூட பேசுகிறவர்களாய்க் காணப்பட்டார்கள், இயேசு மகிமையடையும் போது மொத்தம் 5 நபர்கள் மட்டுமே இயேசுகிறிஸ்துவோடு இருக்க முடிந்தது மோசே, எலியா, பேதுரு, யோவான் மற்றும் பர்வத்த்தில் ஏர முடிந்தது. கர்த்தரோடு வாசம் பண்ண முடிந்தது.

இன்றைக்கும் கூட நீங்கள் இஸ்ரேல் நாட்டிற்குச் சென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மறுரூபமான மலை, அவர் நின்ற இடம், அந்தப் பாறை எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதைக் காணலாம், மேலும் மனிதர்கள் அதில் 3 கூடாரத்தை இயேசு ராஜாவுக்கும், மோசேக்கும், எலியாவுக்குமாக அமைத்து அதில் ஜெபம் செய்வதற்கு ஏதுவாக வைத்திருக்கிறார்கள். அது மனிதனுடைய எண்ணமாய் இருக்கிறது.

சத்தியம் தொடரும்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.